சைவ சமய வரலாற்றில் பதினெட்டாம் நூற்றாண்டு குறிப்பிடத் தக்க ஆண்டாகும். இந்த நூற்றாண்டில் தான் வடலூர் வள்ளற் பெருமான் அவதரித்தார். இறைப் பற்று மிக்க வள்ளற் பெருமான் தொடக்கத்தில்; அருட்பெருஞ்சோதி வழிபாட்டில் தன்னை ஆட்படுத்தாமல் சிவ வழிபாட்டில் ஆட்படுத்திக் கொண்டவர் எனவேதான் அவருடைய முதல் திருமுறை திருமுருகன் பாமாலைகளைத் தன்னகத்துக் கொண்டு விளங்குகிறது. அதில் ஒன்று பிரார்த்தனை மாலையாகும். இது முதல் திருமுறையில் மூன்றாவது பதிகமாக அமைந்தது. இப்பதிகம் பற்றித் ;திருவருட்பா உரையாசிரியர் அ. மாணிக்கம் அவர்கள் வர்த்தமானன் பதிப்பில் குறிப்பிடுகின்ற பொழுது, ஷஷவள்ளலார் தம் வீட்டு மாடி அறையில் கண்ணாடி முன் நின்ற போது முருகப் பெருமான் அக்கண்ணாடியில் காட்சி தந்தார். அவர் கண்ட காட்சியே சீர் கொண்டு எனத் தொடங்கும் பிரார்த்தனை மாலைப் பாடலாகும்' என்று குறிப்பிடுவார். அவ்வாறு அவர் கூறுவதற்குச் சான்றாக அமைந்த பாடல்,
ஷஷசீர்கொண்ட தெய்வ வதனங்கள் ஆறும் திகழ் கடப்பந்
தார்கொண்ட பன்னிரு தோள்களும் தாமரைத் தாள்களும்ஓர்
கூர்கொண்ட வேலும் மயிலும் நற்கோழிக் கொடியும் அருள்
கார்கொண்ட வண்மைத் தணிகாசலமும் என் கண்ணுற்றதே'
என்ற பாடலாகும். இப்பாடலின் உட்பொருளைக் கொண்டு மேற்கூறிய கருத்தை உரையாசிரியர் எழுதியிருக்க வேண்டும். இப்பதிகத்தில் முப்பது பாடல்கள் உள்ளன. முப்பது பாடல்களில் பாடல்கள் ஒவ்வொன்றிலும் முதல் இரண்டு வரிகள் திருத்தணி முருகப் பெருமானுடைய சிறப்புக்களைக் கூறுகின்ற பகுதிகளாகவும் பின்வரும் இரண்டு வரிகள் வள்ளற் பெருமானின் எண்ண்ங்களைப் பதிவு செய்திருக்கின்ற வரிகளாகவும் அமைந்திருக்கின்றன. முப்பது பாடல்களில் அமைந்துள்ள இலக்கிய நயங்களையும் வள்ளற் பெருமான் எண்ணங்களையும் , வள்ளற் பெருமான் கூறுகின்ற அறவுரைகளும் , தத்துவக் குறிப்புக்களும் இடம் பெற்றிருப்பதை எடுத்துக் காட்டுவது இக்கட்டுரையின் நோக்கமாகும்.
முருகப் பெருமானின் வரலாறு:
வள்ளற் பெருமான் காலத்தில் தமிழகத்தில் திருமுருகனின் வரலாற்றுச் செய்திகள் மக்களிடையே நிலவி வந்துள்ளன. அதிலும் திருத்தணி தலம் என்பதால் வள்ளியம் பெருமாட்டியைத் திருமுருகன் திருமணம் செய்து கொண்ட புராணச் செய்தியை இப்பதிகத்தில் பல இடங்களில் வள்ளற் பெருமான் குறிப்பிடுகிறார்.
ஷஷமணியே தினைப்புன வல்லியை வேண்டி
வளர் மறைவான்
கணியே எனநின்ற கண்ணே என்
உள்ளக் கழிநறவே' (பா.5)
என்று தினைப்புனத்தில் இருந்த வள்ளியை விரும்பி , அத்தினைப் புனத்தில் வளர்ந்த வேங்கை மரமாய் நின்ற என் கண்ணே என்று வானத்தில் காணப்பெறும் முருகன் வேங்கை மரமாக நின்ற காட்சியை வள்ளற் பெருமான் குறிப்பிடுகிறார். இதனைக் கந்தபுராணம்,
ஷஷஅடி முதல் மறைகளாக
ஓங்கிய நடுவண் எல்லாம் உயசிவ நூலதாகப்
பாங்கமர் கவடு முற்றும் பல்கலையாகத் தான்ஓர்
வேங்கையின் உருவமாகி வேற்படை வீரன் நின்றான்'
(வள்ளி திருமணம், பா. 15)
என்று குறிப்பிட்டு வேங்கை மரத்தின் அருமையை வெளிப்படுத்தும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக