அழகு முத்து மாலை (பாசமாலை)

என் பாசமிகு அப்பா


அன்பு மகள் மீனாட்சி இலட்சுமணன்.


அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது|| என்ற பாடல் வரிக்கேற்ப இறைவன் அருளால் இந்த மானிடப் பிறவி கிடைத்திருக்கிறது. அதற்கு மூலதனம் என் அப்பா, அம்மா, ஏழேழு பிறவிக்கும் இந்த அம்மா அப்பாவே கிடைக்க வேண்டும்மென்று நான் கடவுளை வேண்டி என் அப்பாவைப் பற்றி எழுதுகிறேன்.
என் அப்பத்தா அய்யாவிற்கு எட்டாவது முத்தாக பெயருக்கேற்ப பிறந்தவர் என் அப்பா. கடைசியாக பிறந்ததால் என் அப்பாவிற்கு கொஞ்சம் செல்லம் அதிகம்.  தமையனார் உதவியால் தமிழைப் படித்தவர். தமிழ் படித்ததால் உயர்ந்து தமிழுக்காக உழைத்துக் கொண்டிருப்பவர். தான் படிக்கும் போது பட்ட கஷ்டங்களை இன்றுவரை மறக்காமல், யார் படிப்பிற்கென உதவி கேட்டாலும் இல்லை என்று சொல்லாமல் மனதாலும் பொருளாலும் உதவி செய்பவர் என் அப்பா.
அப்பாவைப் பார்த்து கற்றுக்கொள்ள வேண்டியவை நிறைய. எந்தவொரு செயலையும் முன்கூட்டியே திட்டமிட்டு பலவாறு யோசனை செய்து சிறப்பாக முடிப்பவர். பேச்சுக்கு செல்வ தென்றாலும். வெளியூருக்கு செல்வதென்றாலும் சோம்பல் இல்லாமல் சரியான நேரத்திற்கு இன்றும் சென்று கொண்டிருப்பவர்.  செய்வன திருந்தச் செய் என்பதற்கேற்ப அப்பா எந்த வேலையை செய்தாலும் அதில் ஒரு நேர்த்தி இருக்கும் பூகட்டுவது, துணி துவைப்பது, புத்தகங்களை அடுக்குவது போன்ற வேலைகளில் அவருக்கு விருப்பம். தேனி போல சுறுசுறுப்பாக இருப்பார். எந்த பொருளை எந்த இடத்தில் வைத்தோம் என்ற ஞாபகம் அதிகம். உடைகள் அணிவதில் விருப்பம் அதிகம்.
நகரத்தார் குல மரபிற்கேற்ப இன்று வரை கட்டுக்கோப்பான வாழ்க்கைக்கு இலக்கணம் இந்த வாழ்க்கை சிறப்பாக வாழ்வதற்கு என் அம்மாவும் ஒரு காரணம். அப்பாவின் முகம் அறிந்து நடந்து கொள்வதில் அம்மாவுக்கு நிகர் அம்மாதான்.
எனக்கு நினைவு தெரிந்த நாள் முதல் அப்பா காலை 4இட்லி, மதியம் ஒரு கையளவு சாதம் மட்டுமே, சாப்பாடு விஷயத்திலும் கணக்குதான். வெள்ளரி, மாங்காய், கேரட் மோர், இப்பவும் பிடிக்கும். எந்த விஷயத்திலும் தன் மனதில் பட்ட படியே முடிவெடுக்கும் பழக்கம் உண்டு. யாருடைய ஆலோசனையையும் ஏற்க மாட்டார்கள்.
தான் படித்த பள்ளி, கல்லூரிக்காக தன்னால் முடிந்த வரை மனதாலும், உடலாலும், பொருளாலும் உடைத்தவர். தமிழால் கிடைத்ததை தமிழுக்காக கொடுப்பதில் அப்பாவுக்கு நிகர் அப்பாவே. கொடுப்பதை அனுபவித்து கொடுப்பதில் வள்ளல். பிறகுக்கு கொடுத்ததை எழுதி வைத்துக்கொள்ளாத நல்ல உள்ளம்.
தாயும் தந்தையும் கண் கண்ட தெய்வம். பெரியபுராணம் , திருவாசகம் , சைவசித்தாந்தம் மிகவும் பிடிக்கும்.
நாம் இருவர் நமக்கு இருவர் என்தற்குகேற்பு  இரு பிள்ளைகளைப் பெற்று இருவருக்கும் நல்லதொரு வாழ்வை கொடுத்து உயர்ந்தவர்.
என்னுடன் கூடப் பிறந்த அண்ணன் ஒருவர் என்றாலும் அப்பாவின் ஆசிரியப் பணி மூலம் கிடைத்த அண்ணன்கள் அக்காக்கள் மிக மிக அதிகம். அண்ணன்களில் முதன்மை இளவழக அண்ணனே. பெறாத பிள்ளை என அப்பா, அம்மா சொல்லுவார்கள். அப்படிப்பட்ட ஒரு நல்ல அண்ணன் சாமிநாதன் அண்ணன். குருபழநி அண்ணன், சாமுவேல் அண்ணன், பரந்தாமன் அண்ணன், முருகன் அண்ணன், பழநி அண்ணன், சேதுபதி அண்ணன், சிங்கமுத்து அண்ணன் என்று பட்டியல் நீண்ட கொண்டே போகும் . லலிதா அக்க, சித்ரா அக்கா, முத்தழகம்மை அக்கா போன்றோரும் அடங்குவர்.
மைலத்தில் பிஎம் சார் அக்கா என்றுதான் அழைப்பார்கள். மேலைச்சிவபுரி, திருச்சியில் முதல்வர் அய்யா, அம்மா என்றுதான் அழைப்பார்கள்
வார நாட்களில் கல்லூரி, சனி , ஞாயிறுகளில் விழுப்புரம் மைலம் வகுப்பு, என்று எல்லா நாட்களும் வேலையோடுதான் அப்பா இருப்பார்கள். கல்லூரியிலிருந்து ஓய்வு பெற்றாலும் லால்குடி, சேலம், ஓசூர், நெய்வேலி, திருச்சி என சைவ சிந்தாந்த வகுப்புகள் தொடர்ந்து கொண்டே தான் இருக்கின்றார். பாடம் நடத்துவதில் என் அப்பாவுக்கு அலாதிப் பிரியம்.
அப்பா என்றால் எனக்கு தெரிந்த தெல்லாம் இறுக்கமான முகமும் மனதுக்குள் கடலளவு பாசமுமே. இன்றுவரை நேரில் முகம் பார்த்து பேச பயப்படும் மகள் தான் நான். என்னை அடித்ததாக எனக்கு ஞாபகம் இல்லை. ஆனால் அப்பா என்றால் இன்றும் ஒரு வித பயம். எனக்கு மட்டுமல்ல என் குழந்தைகள், என் அண்ணன் குழந்தைகள் எல்லாருக்கும் அப்பா என்றால் பயம்தான்.
என்னை ஒவ்வொரு பருவத்திலும் பார்த்து பார்த்து வளர்த்ததைப்போல் என் இரு குழந்தைகளையும் பார்த்து பார்த்து வளர்த்தார்கள். என்னை கல்லூரிக்கு படிக்க அனுப்பவில்லை யென்றாலும் அஞ்சல் மூலம் பி.காம் படிக்க வைத்தார்கள்.  ஆனால் என்னுடைய பெண் குழந்தைகளை கல்லூரிகளில் படிக்க வைத்து அழகு பார்த்தவர் என் அப்பா.
நான் கேட்டு எதுவும் இல்லை யென்று சொன்னதே இல்லை. என்னுடைய எதிர்காலத்திற்காகவே யோசித்துக்கொண்டிருக்கும் உள்ளம் தான் அந்த நல்ல உள்ளம்.
இன்றுவரை அப்பாவிற்கு எப்பொழுது கோபம் வரும் என்று யாராலும் சொல்லமுடியாது. கோபம் வந்தாலும் எப்படி திட்டுவார்கள் என்று எங்களுக்கு தெரியாது. ஆனால் அந்த கோபம் 5அல்லது 10 நிமிடம் தான். பிறகு அவர்களே வந்து நம்மிடம் இயல்பாக பேசும் குணம் எல்லாருக்கும் வராது.

 மைலம் படிவிழா, புதுவயல் ஆண்டுவிழா , கணேசர் செந்தமிழ்க் கல்லூரியின் விநாயகர் சதுர்த்தி விழா என்று எல்லா விழாவிற்கும் எங்கள் வீட்டில் சமையல் பிரமாதமாக நடக்கும்
      பேர் மிக்க யெ.பெரி குடும்பத்தில் பிறந்து தனக்கும்  தன் குடும்பத்திற்கும் பெயர் சேர்த்தவர் என் அப்பா.
      குன்றக்குடி ஆதினம் மைலம் ஆதினம் திருவாவடுதுறை ஆதினம் என்று எல்லோருடனும் அன்புடன் இருப்பார்கள்.
      என் அப்பாவின் கம்பீரக் குரலும் எழுத்து நடையும் கடவுளால் அளிக்கப்பட்ட கொடை.
என் அப்பா அம்மாவும் எனக்காக நிறைய செய்திருக்கிறார்கள். ஆனால் நான்தான் இன்றுவரை எதுவுமே செய்ததில்லை. பெற்றவர்கள் நன்றாக இருக்கவேண்டுமென வேண்டுவதைத் தவிர எனக் கொன்றும் தெரியவில்லை. அவர்கள் செய்த உதவியை நானும் என் பிள்ளைகளும் உயிர் உள்ளவரை நினைத்துக் கொள்வோம்.
என் அண்ணனும் தந்தை காட்டிய வழியில் நல்ல ஆசிரியராகவும் , நல்ல பேச்சளாரகவும் வளர்ந்து கொண்டிருக்கிறார்கள். விதை ஒன்று போட்டால் சுரை ஒன்றா முளைக்கும் என்பதற்கேற்ப  என் அண்ணன் என் மகள் எல்லோரும் ஆசிரியப்பணியை செய்து கொண்டிருக்கிறார்கள்.
--------------------------------------------------------------------------------------------------------------------------



71 ஆம் ஆண்டு பிறந்த நாள் வாழ்த்து
விழாநாயகர்                                                                               விழாநாயகி
பழ.முத்தப்பர்                                                                   மு.அழகம்மை

நாள் -28.5.2017 ஞாயிற்றுக்கிழமை 
நிகழ்இடம் சாக்கோட்டை யெ.பெரி.கட்டிடம்

தாயே உமையவளே, தமிழ்த்தாயே!சரஸ்வதியே
புதுவயலில் வீற்றிருக்கும் போந்தகணபதியே
கரம்கூப்பி, சிரம் தாழ்த்தி வணங்குகின்றேன்.

எங்கள் முத்துஐயா
நெற்றியிலே திருநீறு, நிறமான வெள்சட்டை தூரத்தில் கண்டாலே துல்லியமாய் தெரிந்துவிடும் நாவிலுறை சரஸ்வதியும் நமச்சிவாய மந்திரமும் எங்கள் முத்து ஐயாவின் முதல் உறவு. சங்கத்தமிழ் சரஸ்வதியோ
அய்யாவிற்கு அளித்த பட்டங்கள் பல, பல, முனைவர், தமிழாகரர் , சித்தாந்தச் செம்மணி சிவஞான கலாநிதி , பேராசிரியர். நம் நகரத்தார் மக்களுக்கும் சைவசித்தாந்த வகுப்பெடுத்து நடத்தினார்கள்

எடுத்த ஒரு காரியத்தை முடிக்காமல் விடுவதில்லை புதுவயலில் யெ.பெரி. வீடு என்றால் எல்லோருக்கும் தெரிந்திருக்கும், பழம் முத்தப்பர் வீடு என்று சொன்னால் பளிச்சென தெரிந்துவிடும். சங்கொலி போல் குரல் சத்தம்
சபை முழுக்க ஒலித்திருக்கும்.

முகப்பில் நின்று குரல் கொடுத்தால் மூன்றாம் கட்டுதாண்டி அடுப்படியில் இருக்கும் பெண்கள் எல்லாம் தம்பி வந்திட்டாக என்று சொல்லி தணிந்த குரலில் பேசுவார்கள்.

எங்கள் அழகு ஆயா
அய்யாவிற்கு ஏற்ற அதிசமத்தி அழகு ஆயா அரைமணி நேரத்தில் 50 பேருக்கு அருமையாய் உணவிடுவார். அழகு என்று ஐயா அழைத்தாலே அடுப்படி வேலைகளை தட்டச்சு எந்திரத்தில் ஏறு;றிக்கொடுத்திடுவார். எளிதாக முடித்திடுவார் அன்பான பேச்சு , அரவணைக்கும் நல்ல குணம் அதுதான் எங்கள் அழகு ஆயா.

மனம் போல மகன் ஒன்றும் மகள் ஒன்றும் மகிழ்விக்க வந்தவர்கள் தங்க மகன் பழமாமா  தமிழ்த்துறையில் முனைவரவர்
கம்பன் கழகத்தின் பொருளாளர் பொறுப்பில் உள்ளார். நமது முன்னோரின் பெருமைகளை இன்றைய இளையசமுதாயத்திற்கு எடுத்துக்காட்ட படங்களோடு செட்டிநாடு இதழில் சிறப்பாகக் காட்டிவருபவர்.

 அன்புமகள் மீனாவும் அதிகச் சமத்து அன்பான பெண் மணி.


சாக்கோட்டையில் வீர சேகர உமையாம்பிகை சோழாகுளமும் சுற்றி தேரோடுவீதியும் அழகு போவிலும் தான் அங்கேதான் நமது யெ.பெரி.கட்டிடமு; நமது சொந்தக் கட்டிடத்தில் அய்யாவின் அடியார்கள் சிறப்புப்பு விழா நடப்பது சிறப்பு . பெருமை.

71 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழாவில் திருவடிபூசையும், அடியார்களுக்கு மகேஸ்வரபூஜையும் கண்டு மகிழ்ந்தோம். சிறப்பாக இருந்தது. இதுபோல ஐயா ஆயா எண்பதும் காண எங்களுக்கு ஆவல் நமச்சிவாய மந்திரத்தை நாங்களும் சொல்லுகிறோம்.

வணங்கி மகிழும்
பேரன்.
ரேவதி ராமநாதன்


Image may contain: 1 person, sky, outdoor, water and nature



-------------------------------------------------------------------------------------------------------------------
நூறாண்டு காலம் வாழ்க!



சங்கு மீனாள்
கண்டவராயன் பட்டி



பழ.முத்தப்பன் ஐயா அவர்கனைப் பற்றிச் சொல்லவேண்டும் என்றால் நினறய சொல்லலாம். நான்முதலில் ஐயானவச் ச ந்தித்தது செட்டிநாடு கலை அறிவியல் கல்லூரியில். நான் கல்லூரியில் அலுவலகப் பணியாளராகப் பணியாற்றும் போது எனக்கு  அனைத்து விதத்திலும் உறுதுணையாக இருந்தார்கள்.
 நான் வந்த புதிதில் செம்மொழிப் பயிலரங்கம்  எங்கள் கல்லூரியில் நடந்தது. அதனை மிகச் சிறப்பாக  நடத்தி கல்லூரிக்குப் பெருமை சேர்த்தார்கள். நான் எங்களுடைய வீட்டில் மேல் தளம் கட்ட வாஸ்து செய்வதற்கு ஐயாவும் ஆச்சியும் வந்து சிறப்பித்தார்கள். அவர்கள் வந்து தொடங்கி வைத்ததால் எங்கள் வீடு மிகச் சிறப்பாக சீக்கிரமாக முடிந்தது. அவ்வளவு இராசி. அழகம்மை ஆச்சியும் ஐயாவும் நூறாண்டு காலம் வாழ வாழ்த்துகிறேன்.

சங்கு மீனாள்
கண்டவராயன் பட்டி 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக