அழகு முத்து மாலை (சான்றோர் மாலை)

பேரூர் ஆதீனம் க்கான பட முடிவு

பேரூர் ஆதீனகர்த்தரின் வாழ்த்து. 


பேரன்புடையீர்
அருள்மிக சாந்தலிங்கப் பெருமாள் இன்னருள் பெருகுக
தங்களின் 71 ஆம் ஆண்டு பிறந்தநாள் அழைப்பிதழ் கிடைக்கப்பெற்றது.
இந்நாளில் தங்களது சமய, தமிழ்ப்பணி மேன்மேலும் சிறக்கவும் தாங்கள் உடல் நலத்தோடும் நிறை ஆயுளுடனும் உயர்ந்த புகழோடும் தொண்டாற்ற எல்லாம் வல்ல சாந்தலிங்கப் பெருமான் இன்னருளும் அம்பலவானப் பெருமான் தன்னருளும் குருவருளும் கிடைக்க வேண்டுகின்றோம். தாங்களும் தங்கள் குடும்பத்தாரும் நோயற்ற வாழ்வும் குறைவற்ற செல்லமுமாய் எல்லா வளங்களும் பெற்று வாழவும் வாழ்த்துகின்றோம்.


இத்துடன் சாந்தலிங்கப் பெருமான் அருட்திருநீறு இணைத்துள்ளோம். அணிந்தின்புறுங்கள்.
                                                                                                   வேண்டுந்தங்களன்பு
                                                                                                     அன்புள்ள

                                       (சீர்வளர்சீர் குருமாகசந்நிதானங்களின் அருளானைப்படி)
மருதாசல அடிகள்
இளைய சந்நிதானங்கள், பேரூராதினம்.
பேரூர் ஆதீனம் க்கான பட முடிவு

-------------------------------------------------------------------------------------------------------------------------

அறவாணன் க்கான பட முடிவு

முனைவர் க.ப. அறவாணன்


அன்புடையீர்
வணக்கம்
தங்கள் தந்தையார் பேரா பழ. முத்தப்பன் அவர்களி்ன் 71 ஆம் ஆண்டு பி்றந்தநாள்விழா அழைப்பு கி்டைத்தது. மகிழ்ச்சி். நன்றி

அழைப்பு மிகக் கவனமாக கவனிப்புடன் அழகுடன் அச்சடிக்கப்பெற்றுள்ளது. பாராட்டுகள்.

நேரில் வர விருப்பம்தான். தொலைவு, முதுமை ஆகி்யன இங்கி்ருந்தே வாழ்த்தும்படி செய்கின்றன. எங்கள் அன்பைத் தங்கள் பெற்றோருக்குத் தெரிவிப்பதுடன் தொடர்புடைய உறவினர் அனைவருக்கும் தெரிவிக்க வேண்டுகிறோம்.
இங்ஙனம்

அறவாணன், தாயம்மாள்.

-----------------------------------------------------------------------------------------------------------
தாயம்மாள் அறவாணன் க்கான பட முடிவு

பேரா. திரு. பழ. முத்தப்பன் ஐயா! தங்களின் 71 ஆம் ஆண்டை மகிழ்வுடன் வரவேற்கிறோம். தாங்கள் எங்கள் ஐயாவின் நூல்களை வரவேற்பவர்கள், படிப்பவர்கள் மேலைச்சிவபுரியில் பெரிய கருத்தரங்கை நடத்திக்காட்டினீர்கள்.


தங்க வைத்து உணவையும் தந்தீர்கள் தங்கள் துணைவியார் திறமையான ஆச்சி. தங்களை எங்கள் குடும்பம் மதிக்கிறது. வாழ்க பல்லாண்டு.
அன்புள்ள
தாயம்மாள் அறவாணன்

--------------------------------------------------------------------------------------------------------------------

டாக்டர் சுப. திண்ணப்பன்
சார்புநிலைப் பேராசிரியர்
சிங்கப்பூர் சமுக அறிவியல் பல்கலைக்கழகம்
சிங்கப்பூர்


                                                           சிவபுரி காட்டிய செல்வர்


சிவபுரி சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திற்கு அருகில் உள்ள ஒரு சிற்றூர். இன்று மக்கள் வழக்கில் இருக்கும் இப்பெயர் கொண்ட இந்த ஊருக்கு 1200 ஆண்டுகளுக்கு முன்பு வழங்கிய பெயர் திருநெல்வாயில். திருஞானசம்பந்தரால்  பாடப்பெற்ற திருத்தலம். இங்குக் கோயில் கொண்டுள்ள இறைவன் பெயர் உச்சிநாதர். இறைவி பெயர் கனகாம்பிகை. தலமரம் நெல்லி. இங்குள்ள கோயிலுக்கு அறங்காவலர்களாகக் (திருப்பணி செய்தவர்கள்); கோட்டையூர் அழ. சித. அழகப்பா செட்டியார் மரபினர். 
விருத்தினாகி வெண்ணீறு பூசிய
கருத்தனார் கனலாட்டு உகந்தவர்
நிருத்தனார் நெல்வாயில் மேவிய 
ஒருத்தனார் எமது உச்சியாரே
என்று ஞானசம்பந்தப் பெருமான் இத்தலத்தைப் போற்றிப் பாடியுள்ளார். திருக்கடைக்காப்பில் இத்தலத்தைப்
பண்பயன் கொளப் பாட வல்லவர்
விண் பயன் கொளும் வேட்கை ஆளரே
என்று விண்ணுலக வீடுபேறு பெறுவர் எனக் கூறுகிறார். மேலும் இத்தலத்தில் குழந்தைக்கு முதற்சோறு ஊட்டினால் எக்காலத்திலும் அக்குழந்தையின் வாழ்வில் பட்டினி நிகழாது என்னும் ஐதீக வழக்கும் உள்ளது.
1960 களில் நான் அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தமிழ்த் துறையில் விரிவுரையாளராய் பணியாற்றிய போது இந்தத் தலத்தை வழிபட விரும்பினேன். அப்போது தான் புதுவயல் பழ. முத்தப்பன் புலவர் வகுப்பில் அண்ணாமலை பல்கலை கீழ்த்திசைத் தமிழ்த்துறையில் பயின்று கொண்டிருந்தார். அவர் சிவபுரியில் கோட்டையூர் நகரத்தார் விடுதியில் தங்கிக் கோயில் பணி மேற்பார்வையும் செய்து வந்தார். அவரிடம் என் வழிபாட்டு விருப்பத்தைத் தெரிவித்தேன். உடனே சிதம்பரத்தில் தங்கி இருந்த எனக்கும் மனைவிக்கும் ஒரு மாட்டுவண்டி சிவபுரியிலிருந்து அனுப்பிவைத்தார். அதில் நாங்கள் சென்றோம். சிவபுரியில் உள்ள கோயிலுக்கு அழைத்துச் சென்று இறைவழிபாடு செய்வித்து மாலை மரியாதைகளும் வழங்கிச் சிறப்பித்து ஒரு நாளிரவு விருந்து ஓம்பித் திரும்பி அந்த வண்டியில் அனுப்பி வைத்தார். அப்போது பேருந்து வசதி அங்கு செல்ல இல்லை. இவ்வாறு எனக்குச் ~சிவபுரி| காட்டிய செல்வர்தான் திரு பழ. முத்தப்பன்.
புலவர் படிப்பினை முடித்துப் படிப்படியாக இளங்கலை, முதுகலை, முனைவர் முதலிய கல்வித் தகுதிகளைப் பெற்று மேலைச்சிவபுரி சன்மார்க்கச் சபைத் தமிழ்க் கல்லூரியின் முதல்வராகப் பணியாற்றினார். அதனை ஒரு கலைக்கல்லூரியாக மாற்றிய பெருமையும் இவர்க்கு உண்டு. பின்னர் திருச்சியில் செட்டிநாடு கலைக்கல்லூரி முதல்வராகத் திறம்படப் பணியாற்றி ஓய்வு பெற்றார். ஓய்வு பெற்றாலும் ஓயாமல் திருமுறை , சைவ சித்தாந்தம், முதலிய திருநெறிய தமிழ்ப்பணி செய்து வருகிறார். திருச்சியில் கல்லூரிக்கு என்னை அழைத்துச் சொற்பொழிவாற்றச் செய்து பெருமைப்படுத்தினார்.
திருமுறைகளிலும்  சித்தாந்தச் செந்நெறியிலும் இவர்க்கு ஆழ்ந்தகன்ற புலமை பலராலும் பாராட்டப்படுவதற்குரியது. கேட்டார்ப்பிணிக்கும் தகையவாய்க் கேளாரும் வேட்பு மொழியாற்றும் நாவலர். பல கவியரங்குகளில் பாடிய பாவலர். பட்டிமன்றப் பேச்சாளர், மாணவர் உளங்கொளப் பாடம் நடத்தும் நல்லாசிரியர். சித்தாந்த நூல்களுக்குக் திருக்கோவையார் போன்ற திருமுறைகளுக்கும் உரை  எழுதிய உரையாசிரியர். ஆய்வு நூல்கள் பலவற்றை எழுதிய அறிஞர். அனைத்துலகக் கருத்தாங்குகளில் அறிஞர் பலர் பாராட்டும் கட்டுரைகளாப் படைத்தவர் . பதிப்பாசிரியர் பணியுமாம் பெருமை என்பதற்கேற்ற பண்பாளர். தம் ஓரே மகனையும் தமிழ்ப்பணியாற்றச் செய்த தகைமையாளர்.
இத்தகைய புலமையாளரைச் சிங்கப்பூர்pல் நடைபெறும் திருமுறை மாநாடு ஒன்றின் (1998) சிறப்புப் பேச்சாளராக அழைத்தோம். அன்று முதல் பலமுறை சிங்கப்பூருக்கு அவர் பல பணிகள் நிமித்தம் வந்து செல்கிறார். வீரமாகாளியம்மன் கோயிலில் ஒரு வாரம் சித்தாந்த வகுப்பு நடத்தவந்தார். அண்ணாமலைப் பல்கலைக்கழக அஞ்சல்வழிக் கல்வி இளங்கலை, முதுகலை கற்ற மாணவர்களுக்குப் பாடம் நடத்தும் வருகை தரு பேராசிரியராகவும் அறநெறிக்கல்விப் பாடம் தொடர்பான வழிகாட்டி நூல் உருவாக்குபவராகவும் இருந்து உதவினார். திருமுறை மாநாட்டின் வெள்ளிவிழாத் தொடர்பாகத் திருமுறை தந்த பெருமக்கள் என்னும் நூலை உருவாக்கிப் பதிப்பித்துக் கொடுத்தார். நான் திருச்சி செல்லும் போதெல்லாம் என்னை வந்து சந்தித்து அளவளாவிச் செல்லும் பேர் அன்பினர் பழ. முத்தப்பன்.
அவர் மகன் மு.பழநியப்பன் இளைய தலைமுறைத் தமிழாசிரியர். கணினித் தொழில் நுட்பவல்லுநர் அயரா உழைப்பும் கற்றுக்கொள்ளத் துடிக்கும் தமிழார்வமும் கொண்டவர். அவர் சிவகங்கைக் கல்லூரித் தமிழ்த்துறைத் தலைவராக இருந்தபோது ஒரு கருத்தாங்குக்கு என்னை அழைத்துச் சிறப்பித்தார். அவரின் பேச்சாறலைக் கண்டு ஒருமுறை திருமுறை மாநாட்டிற்குச் சிறப்புப் பேச்சாளராகச் சிங்கைக்கு அழைத்தோம். என் கட்டுரைகளைத் தட்டச்சுச் செய்யப் பலவகைகளில் உதவினார். இப்போது கம்பன் கழகத்தில் கம்பன் அடிசூடி பழ. பழனியப்பன் அவர்களுடன் இணைந்து கருத்தரங்கப் பணிகள் , கட்டுரைப் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். கம்பனில் வானியல் முதலிய நல்ல ஆய்வு நூல்கள் ஆக்கியுள்ளார். சங்க இலக்கியம், பக்தி இலக்கியம், இக்கால இலக்கியம் ஆகியவற்றில் நல்ல புலமை பெற்றுத் தந்தையர் ஒப்பர் மக்கள் என்பதற்கேற்ப இலங்குகிறார். தந்தை மகற்காற்றும் நன்றி மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி என்னும் திருக்குறள்களுக்கு இலக்கணமாக முத்தப்பனாரும் பழநியப்பனும் இருக்கிறார்கள்.
இந்த இருவரின் தொடர்பும் , நட்பும் எனக்குக் கிடைத்த பேறுகளாக எண்ணிப் பெருமிதம் கொள்கிறேன்.  முத்தப்பரின் மனைவியாரும் இல்லறக் கடமைகளை  இனிது செய்வதுடன் அவரின் தமிழ்ப்பணிகளுக்கு அருந்துணையாக  இருப்பதை நான் அறிவேன் 
எழுபதாம் ஆண்டு நிறைவு விழாக் காணும் என் இனிய நண்பர் திரு. பழ. முத்தப்பன் அவர்கள் சாக்கோட்டையில் ஆண்டவன் வழிபாடு அடியார் வழிபாடும் செய்து மண்ணினிற் பிறந்தார் பெறும் பயன் ஆகிய அண்ணலார். அடியார் தமக்கு அமுது செய்விக்கும் அரும்பொரும் விழாவாகக் கொண்டாடுவது பெரு மகிழ்ச்சயைத் தருகிறது.
பழ. முத்தப்பன் சிவபூசை செய்யும் சீலர், சித்தாந்தம், திருமுறைகளைப் பலர்க்கும் பலவiயானும் போதித்துச் சிவபுரிக்குச் செல்லும் வழிகாட்டியாகத் திகழ்கிறார். ஆமாம்! அவர் எனக்கு மட்டும் சிவபுரி காட்டிய செல்வர் அல்லர். செந்தமிழ்நாட்டில் , சிங்கை , மலேசியா , இலங்கை வாழ் பலர்க்கும் தம் பேச்சாளும் , வாழ்வாலும் ~சிவபுரி| செல்லும் செந்நெறிகளைக் காட்டியவராக இருப்பது போற்றத்தக்கது.
சிவபுரி செல்லும் வழிகாட்டியாகத் திகழும் செல்வர் பழ. முத்தப்பனார்- நீலமணிவிழா என்று இப்போது அழைக்கப்பெறும் எழுபதாம் ஆண்டு நிறைவு விழாக் காணுகிறார். கோலமயில் ஏறும் குமரன் அருளாய் அவரும் அவர் குடும்பத்தினரும் எல்லாச் செல்வமும் பெற்றுப் பல்லாண்டு இனிது வாழவும் அவர்களின் தமிழ்ப்பணி தழைக்கவும் இறைவனை வணங்குகிறேன்.
-----------------------------------------------------------------------------------------------------------------

பொலிக ! பொலிக!


(முனைவர் சரசுவதி இராமநாதன். பள்ளத்தூர்
தலைவர். கண்ணதாசன் தமிழ்ச்சங்கம். சென்னை.


வல்லமை தாராயோ! இந்த மாநிலம் பயனுற வாழ்வதற்கே! என்றார் பாரதி. அப்படி மாநிலம் பலன் பெற வாழ்பவர் சிலரே! ஏதோ பிழைக்கிறேன்- என்பவர் சிலர். நாளை ஓட்டுகிறேன் என்பவர் சிலர். ~~வாழ்கின்றேன்|| என்பவர் மிகச்சிலரே!|| நமது வாழ்வு, நாட்டுக்கு, இனத்திற்கு , சமயத்திற்கு , மொழிக்கு, உயிரினங்களுக்கு என்று ஏதாவது ஒருவகையில் நல்லது செய்யப்பயன்படவேண்டும். வாழும் நாள் என்பது பிறர் நம்மைப் போற்றி வாழ்த்தும் நாளாக அமைய வேண்டும். அப்படி வாழ்த்துப்பெறத் தகுதியானவர் என்தம்பி முத்தப்பனார்.
நன்முத்து
~~முத்திலே சிறந்து முத்து. மூன்றெழுத்துப் பழநி முத்து|| என்பர். அந்தப் பழநி அப்பா தந்து, தமிழகத்திற்கு, தமிழுக்கு , சைவத்திற்குப் பெருமை தரும் முத்து முத்தப்பன்! முத்துக்கு முத்துமாலை கட்டி அணிவிக்கும் அவரது நன்மகன், பாட்டனார் பெயரையும் தந்தையின் புகழையும் காத்து வரும் மு. பழநியப்பன், என் மருமகன். நான் முத்தப்பனுக்கு அக்கா அல்லவா?
பேர் ஆசிரியர்
சிலர் பேருக்கு ஆசிரியர், சிலர் பேராசிரியர் ஆனால் பெருமைக்குரிய ஆசிரியராக, முதல்வராக மேலைச்சிவபுரி கணேசர் செந்தமிழ்க்கல்லூரியில். செட்டிநாடு கலை அறிவியல் கல்லூரியில் வெற்றிக் கொடி நாட்டியவர் முத்தப்பன். குறிப்பு வாங்கிக் கட்டுரை எழுதமாட்டேன் நான்! அவரைப்பற்றி என் நெஞ்ச ஏட்டில் குறித்து வைத்துள்ள புகழை எழுதுகிறேன். கண்டிப்பான முதல்வர் என்பர், எத்தனை புகழ் மிக்க மாணவர்களை அவரால் உருவாக்க முடிந்தது என்று பார்த்தால் - வியப்பாயிருக்கிறது. மேலைச்சிவபுரியில் படித்தேன் என்றாலே பெருமை. முத்தப்பனார் மாணவன் என்றால் அதைவிடப் பெருமை என்பேன். ஒழுக்கம். காலம் தவறாமை தெளிவுற அறிந்து, தெளிவுதர மொழிந்து பாடம் சொல்லுதல், யாரிடத்தும் கூழைக்கும்பிடுபோடாத நிமிர்வு. இவை அவரிடம் நான் கண்ட சில நல்ல பண்புகள்! கல்லூரி முதல்வர் என்றால், மாணவர் நிர்வாகம் , ஆசிரியர்கள் கல்வித்துறை அதிகாரிகள் என நாற்புறமும் பிரச்சனைகளைச் சமாளிக்க வேண்டும் அதைத்திறம்படச் செய்தவர்தான் முதல்வராகத்திகழ முடியும். வெற்றி பெற்ற முதல்வர் முத்தப்பன்.
இலக்கிய மேடைகள்
பல்லாயிரம் மேடை ஏறியவர். களம் கண்ட வேங்கை இவர். பட்டிமண்டபமா, வழக்காடுமன்றமா, தனி உரையா, எதிலும் தனி முத்திரை பதித்து தனக்கென ஆர்வலர் கூட்டத்தைக்கொண்டவர். எழுத்து, பேச்சு, செயல்திறன் மூன்று முகம் கொண்ட முதல்வர் இவர். சைவ சித்தாந்தத்தை எளிமைப்படுத்தி, இயல்பாகப் பேசிப் புரிய வைக்கும் சதுரர்!
திருவாசக முற்றோதல்
திருச்சியில் அருமைச் சிவனடியார்களைக் கூட்டி, திருவாசக முற்றோதல் நெறிப்படுத்தி அதில் வெற்றி கண்டுள்ளார். இவருடைய  ~திருவாசக ஓதுவார்கள்| மிகச் சிறப்பாக சொல்பிரித்து , உச்சரிப்பு நயத்துடன் இனிய பண்களில் பாடவல்லார்கள். ஓதுவார் என்றதும் திருமுறை இசைவானர் என எண்ணாதீர். சாதாரணக் குடும்பப் பெண்களும் ஆண்களும் திருவாசகத்தைப் பரப்பும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள் என்றால் அந்தப் பெருமை முத்தப்பனாருக்கே!
பணம், புகழ், விளம்பரம் என, அலையும் பலருக்கு மத்தியில் முத்தப்பனை வித்தியாசமானவராகப் பார்க்கிறேன். அக்கா போலத் தம்பியும் இலக்கிய வியாபார பேரம் செய்யாதவர், அதனாலேயே தம்பியை மதிக்கும் அக்கா நான்
எழுபது கண்டார். நூலும் காண்பார்||
செந்தமிழுத்து எழுபது
புலமைப் பெருமிதத்திற்கு எழுபது
ஆழ்ந்த சிவநேயத்திற்கு எழுபது
எளிமைக்கு எழுபது
கொள்கைப் பிடிப்புக்கு எழுபது
ஆசிரியப் பணிக்கு எழுபது
அர்ப்பணிப்புக்கு எழுபது
முத்தப்பனாருக்கு வயது எழுபது என்றதும் நம் மனத்தில் எழுவது இவையே! பொலிக பொலிக!
எனப்போற்றுவோம்
இவரது குடும்பம், நல்லறமான இல்லறம் ஆச்சி என்ற வேர் இந்தச் செட்டியாரின் புகழ் மரத்திற்கு அடித்தளம்.
பதிதறு பேறுகளுடன் இவர்கள்,
நூறாண்டுக் காலம் வாழ்க
நோய் நொடியில்லாமல் வளர்க!
என்று அன்பால் வாழ்த்தும்
அக்கா (ஆச்சி)
சரசுவதி இராமநாதன்
பள்ளத்தூர்
------------------------------------------------------------------------------------------------------------------


Image may contain: 1 person, standing and outdoor


கண்ணையன் தட்சிணாமூர்த்தி,இ.ஒ.ப,
உதவி இயக்குநர் (நிகழ்ச்சி)
வெளிநாட்டு ஒலிபரப்புப் பிரிவு,
அகில இந்திய வானொலி
புதுதில்லி-110001

பணியுமாம் என்றும் பெருமை  என்ற வள்ளுவப் பேராசனின் வாய்மொழிக்கு இலக்கணமாய்த் திகழ்பவர் பேரா. முனைவர். பழ.முத்தப்பனார் அவர்கள்
அகில இந்திய வானொலியின் திருச்சிராப்பள்ளி நிலையத்தில் நான் பணியாற்றிய காலத்தில் அப்பெருந்தகையாளருடன் பழகும் பெரும்பேறு கிட்டியது. வானொலியின் இலக்கிய நிகழ்ச்சிகளில் பங்கேற்கப்பதிவுக்கு வருங்கால் எல்லாம் ஐயா அவர்களின் அடுத்த தமிழ் சொற்பெருக்கில் திளைத்திருக்கிறேன். கற்றுத் துறைபோகிய அறிவினால், ஆர்ப்பாட்டமின்றி அமைதியாய், அதே வேளையில் ஆணித்தரமாய் இலக்கிய நுட்பங்களை எடுத்துரைக்கும் ஐயாவின் சொல்வன்மையின் முன்னே, மகுடி இசைக்கேட்ட பாம்பாய் மயங்கிக் கிடந்திருக்கிறேன். ~இருதலைக் கொள்ளி | உள் ~எறும்பாய்| எனப் பண்டிதமணி கதிரேசனார் விளக்கிய நுட்பத்தை அவர் எடுத்துரைத்த பாங்கு இன்றும் நிலைவில் ஆடுவது.
திருச்சிராப்பள்ளியில் செயல்படும் செட்டிநாடு கலைஅறிவியல் கல்லூரி, தொடக்கத்தில் வானொலி நிலையத்திற்கு எதிரே இருந்த கட்டடத்தில், வாடகைக்கு இடம் பெற்று இயங்கியது. அக்கால் பேரா. பழ.மு. அவர்கள் கல்லூரி முதல்வர் பொறுப்பேற்று இருந்தார். அவர்களுடைய ஈடுபாட்டினால் கல்லூரி மாணவர் சேர்க்கை பெருகி, பல பிரிவுகளில் பாடங்கள் தொடங்கப்பெற்று, தற்போதுள்ள விரிந்த பரப்புடைய சொந்த இடத்திற்குக் கல்லூரி இடம் பெயர்ந்ததையும் நான் அறிவேன். தமிழார்வலர் இராசவேலு அவர்கள் தம் கைப்பொருள்கொண்டு சிறப்புடன் தொடர்ந்து நடத்தி வந்த, திருவரங்கத்துச் செண்பகத் தமிழ் அரங்கில், தமிழறிஞர் பலரின் தொடர் சொற்பொழிவுகள் நடந்துவந்தன. அந்த வகையில், பேரா. பழ. மு. அவர்கள். மணிமேகலைக் காப்பியம் பற்றிய தொடர்வகுப்பினை நடத்தினார்கள். அவ்வகுப்பில் ஓரிரு முறை யான் பங்கேற்றதையும் நினைவு கூர்கிறேன்.
வானொலியில், மார்கழத்திங்களில், திருப்பாவை- திருவெம்பாவை-திருப்பள்ளி எழுச்சிப்பாடல்களும் அவற்றுக்கான உரை விளக்கங்களும் ஒலிபரப்புவது பலகாலமாய்த் தொடர்ந்து நிகழ்வது. பெரும் பெரும் அறிஞர்கள் இந்நிகழ்ச்சியை வழங்கி வருகின்றனர். அகோபிலமடம் ஜீயர் சுவாமிகள் போன்றவர்கள் திருப்பாவைப் பாடல்களுக்கு விளக்கம் அளிப்பார்கள். தருமையாதீனத்து 26ஆம் குருமகா சன்னிதானம் அவர்கள் திருவெம்பாவைப்பாடல்களுக்கு விளக்கவுரை வழங்கியும் அருளியிருக்கிறார். அறிஞர் பெருமக்கள் நவில்தொறும் புது நயம் தோன்ற, இன்றளவும், ஆண்டுதோறும் இந்த நிகழ்ச்சி சிறப்புற ஒலிபரப்பாகி வருகிறது. இந்த வரிசையில் பேரா. பழ.மு. அவர்களின் விளக்கவுரையும் இடம் பெறச் செய்ததில் எளியேனின் பங்குண்டு என்பதில் அகம்மிக மகிழ்கிறேன்.
தமிழாகரர் பேரா. பழ. மு. ஐயா அவர்கள் எழுபதாம் அகவை நிறைவெய்தும் இத்தருணத்தில் அவர்களை வாழ்த்தி வணங்கி மகிழ்கிறேன். அவர் ஆற்றிய இல்லறப் பயனாய்த் திகழும் அருமை நண்பர் முனைவர். மு.பழனியப்பன், தம்பெற்றோரின் எழுபதாம் அகவை நிறைவு விழாவைச் சிறப்புறக்கொண்டாடுவது பெரும் சிறப்புடையது. இவ்விழாச் சிறக்க என் மனம் நிறைந்த நல்வாழ்த்துக்கள்.
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்
தெய்வத்துள் வைக்கப்படும்.
அன்புடன்
தட்சிணமூர்த்தி

-----------------------------------------------------------------------------------------------------

கலைமாமணி ஆவுடையப்பன், கண்டனூர்

சைவ சித்தாந்தப் பெருந்தகை திரு. பழ.முத்தப்பன் அவர்களும், நானும்,  சிவகெங்கை மாவட்டம்,  கண்டனூர் சிட்டாள்ஆச்சி நினைவு பள்ளி மாணவர்கள். அப்போது தமிழுக்கு முக்கியத்துவம் நிறைந்த காலம். அரசியல் கலப்பில்லாத  அக்கால தமிழ் பயின்றவர்கள் நாங்கள். திரு.மெ.திருநாவுக்கரசு  எனும் தமிழ்ப் பற்றாசிரியர், " இமயத்தின் எல்லை கண்ட எந்தமிழ் என்றும் வாழ்க ", எனும் சொற்றொடரை உருவாக்கி தமிழுக்கு பெருமை சேர்த்தார். அச்சொற்றொடரே எங்கள் பள்ளியின் முகப்பில் பொறிக்கப்பட்டுள்ளது. எந்த பள்ளியிலும் இல்லாத தனிச்சிறப்பு ஆகும். அவர் தமிழ் வகுப்பிற்கு மாணவர் தலைவராக நியமிக்கப்பட்டார். பேச்சுப்போட்டியிலும், கட்டுரைப் போட்டிகளிலும் எப்போதும் அவருக்கே முதலிடம். அவர் நிறைந்த ஆயுளுடன் தமிழுக்கு தொண்டு செய்வார் என்பதில் சந்தேகமில்லை.



-----------------------------------------------------------------------------------------------------
எழுத்தாளர் சந்திரகாந்தன்
சிங்கம்புணரி


நாடறிந்த கவிஞர், கல்லூரிப் பேராசிரியர். ஆயினும் உறவினராலும் அண்டை வீட்டாராலும் பிள்ளைகளின் தோழமைகளாலும் எப்படி அடையாளப்படுத்தப்படுகிறார் என்பதை கவிஞர் மீரா ஒரு கவிதையில் நயம்பட உரைத்திருப்பார். அதில் தான் தன் மகன் கதிரின் நண்பர்களுக்கு 'கதிரின் அப்பா' வாக அறிமுகமாயிருப்பதாகக் கூறியிருப்பார். 


அப்படித்தான் அய்யா எனக்கு பழநியப்பனின் அப்பாவாகத்தான் முதலில் அறிமுகமானார்கள். அன்பான தந்தையாக, கனிவுக்குப் பங்கம் வராத கண்டிப்பு மிக்க தந்தையாக, மகனுக்கு அதிகபட்ச சுதந்திரம் வழங்குகிற தந்தையாக, மகனை நம்புகிற தந்தையாக அவர்கள் விளங்கக் கண்டபோது எனது மதிப்பிற்குரியவரானார்கள். ஏனெனில் அத்தகைய தந்தையர்கள் அபூர்வம்.



பின்னர் அவர்கள் கல்லூரி முதல்வர், தமிழறிஞர், சைவ சித்தாந்தத்தில் ஆழங்கால் பட்டவர்கள், சிறந்த பேச்சாளர் என அறிய அறிய மதிப்பு கூடிக் கொண்டே போனது. 



பணியாற்றிய கல்லூரியில் படிக்க வந்த மாணவர்களை எல்லாம் தம் மக்களாகக்கருதி உணவும் தமிழ் அறிவும் வழங்கும் அவர்களது குடும்பத்தில் 'தொடரும் குழு' மூலமாக நானும் ஒருவனாகும் பேறு பெற்றேன். 



பொதுவாகப் பைசாப் பெறாத வேலைகளில் பிள்ளைகள் ஈடுபடுவதைப் பெற்றோர்கள் ஊக்குவிக்க மாட்டார்கள். 'தொடரும்' பைசாவுக்குப் புண்ணியமில்லாத செயல் மட்டுமில்லை; செலவை இழுத்து விடுகிற வேலையும் கூட. ஆனால் அது விஷயத்தில் அய்யாவும் அம்மாவும் காட்டிய காட்டும் ஆதரவு. . . அளவிட முடியாதது. அவர்கள் ஊற்றிய நீராலும் இட்ட உரத்தாலுமல்லவோ இன்று வெள்ளி விழா ஆண்டில் 'தொடரும்' பயணிக்கிறது. கை குவித்தேன் அம்மையப்பர்க்கே.

***

எனக்கு பழந்தமிழ் இலக்கியங்களில், பக்தி இலக்கியங்களில் ஈடுபாடு ஏற்படக் காரணமானவர்களில் அய்யாவும் ஒருவர். அவரது சொற்பொழிவுகளும் பட்டிமன்ற நடுவர் உரைகளும் பழந்தமிழ், குறிப்பாக பக்தி இலக்கியத்தை நன்கு அறியச் செய்தன. கணீரென்ற மணிக் குரலோடு கம்பீரமான தோற்றப் பொலிவோடு மேடை ஏறி எடுத்துக் கொண்ட பொருளை உணர்ச்சிகரமாக, ஆழமாக அவர்கள் முன் வைக்கிற விதம் மறக்க முடியாதது.



ஒருமுறை கிருங்காகோட்டையில், குளத்து நீரீன் ஆழத்தை எப்படி அளப்பது என ஆசிரியன் கேள்வி கேட்டதாகவும் மாணவர்கள் பலவிதமாக விடையளித்ததாகவும் ஒருவன் மட்டும் தாமரை மலரின் தண்டை வைத்து அளந்து விடலாம் எனச் சொன்னதாகவும் படிப்படியாகக் கதை வளர்த்து உச்சத்தில் திருக்குறளை உட்கார்த்தி வைத்த பாங்கு இப்போதும் " வெள்ளத் தனைய மலர் நீட்டம் மாந்தர்தம் உள்ளத்தனையது உயர்வு" என்ற குறளைப் படிக்கிறபோதெல்லாம் நெஞ்சிலாடுகிறது.



அதேபோல் பெரிய புராணத்துக் கமலவதியின் லட்சிய வேட்கையையும் மனத் திடத்தையும் அவர்கள் எடுத்துக்காட்டுகிற விதமும் கமலவதி என்கிற பெயரை எதற்காகவோ கேட்டாலும் என் மனசில் மூண்டெழும்.

***



எனது கிராமத்தில் ஒரு குட முழுக்கு. அதற்காக பக்திச் சொற்பொழிவிற்கு அய்யாவை அழைத்து வர வேண்டுமென உறவினர் விரும்பினர். அய்யாவிடம் சொன்னேன்.தயங்காமல் சம்மதித்தார்கள். குறிப்பிட்ட நேரத்திற்கு என் வீட்டிற்கு வந்து விருந்தேற்றார்கள். கூட்டம் நடக்குமிடத்திற்குப் போனால் அதிகமாக பத்துப் பேர்தான் இருந்தனர். மிகப் பெரிய சொற்பொழிவாளரை இப்படி ஒரு மஹா சின்னக் கூட்டத்திற்கு அழைத்து வந்து விட்டோமே என எனக்குள் உறுத்தலும் வருத்தமும். அய்யாவோ எந்தச் சங்கட உணர்வுமின்றி வழக்கமான பாணியில் ஒரு பெருங் கூட்டத்தின் முன் எப்படிப் பொழிவார்களோ எவ்வளவு பொழிவார்களோ அப்படி, அவ்வளவு பொழிந்தார்கள். அவர்களின் பெருந்தன்மை என்னே.

***



புதுவயலில் அவர்கள் பொறுப்பிலுள்ள பள்ளியில் புதிய கட்டிடத் திறப்பு விழா. தாமதமாகச் சென்ற நான் இறுதி வரிசையில் உமா பதிப்பகம் இலட்சுமணன் அண்ணனோடு அமர்ந்துவிட்டேன். விழா முடிந்தபோது என்னைக் கண்ட அய்யா அவர்கள் "நான் நீங்கள் வந்ததைக் கவனிக்க வில்லையே. உங்கள் வருகையை மேடையில் அறிவிக்கத் தவறிவிட்டேனே"எனப் பலமுறை வருத்தம் தெரிவித்தார்கள். வந்திருப்போரை நல்ல முறையில் கௌர'விக்க வேண்டும் என்பதில் கவனமாக இருப்பது அவர்களது உயரியபண்புகளில் ஒன்று.

***



அவர்களது சிறந்த பண்புகளில் மற்றொன்று.: கருத்துச் சுதந்திரத்தை மதித்தல். இடதுசாரியான என்னோடு நெருக்கம் கொண்டாடும் பழநியப்பனின் நோக்கையும் போக்கையும் அவர்கள் தடுக்கவோ குறைக்கவோ முயன்றதில்லை. அவர்கள் முதல்வராகப் பணியாற்றிய கல்லூரியில் நூலகராகப் பணியாற்றிய முருகேசபாண்டியன் அவர்களும் அய்யாவின் இந்தப் பண்பு குறித்து என்னிடம் பகிர்ந்துகொண்டிருக்கிறார். தனக்கு அய்யா செயற்பாட்டுச் சுதந்திரம் வழங்கியிருந்ததாக அவர் கூறியதுண்டு.

***



திருமண வாழ்த்தரங்களில் "எங்களையே எடுத்துக்காட்டாகக் கொள்ளுங்கள்" என்று அய்யா கூறுமளவுக்கு அம்மாவும் அய்யாவும் மனமொத்த இணையராய் வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் பெற்றெடுத்த செல்வங்கள் நல்ல வண்ணம் வாழ்கின்றனர். திருவள்ளுவர் கூறிய நன்றிக்கும் உதவிக்கும் சான்றாய் அய்யாவும் பழநியப்பனும் விளங்குகின்றனர். அய்யாவால் ஏற்றப்பட்ட தமிழ்ச்சுடரை ஏந்திக் கொண்டு அவரால் உருவாக்கப்பட்டவர்கள் தமிழகமெங்கும் ஒளிர்ந்து கொண்டிருக்கின்றனர். நிறைவான வாழ்வு வாழும்

அவர்களை வணங்குவோம்; வாழ்த்துவோம்; ஆசிகள் வேண்டுவோம். 



அம்மையே அப்பா அன்பினில் விளைந்த ஆரமுதே.

---------------------------------------------------------------------------------------------------------
Image may contain: 1 person

மீஅள . பெரி . நா வெ .நா .சோ . மீனாட்சி சுந்தரம்
புதுவயல்
திரு பழ .மு   பற்றிய எண்ண சிதறல்கள்
==============================
i want to speak from  bottom of my heart

அண்ணன் பழ .மு எனக்கு அண்ணன் முறை பங்காளி ஆவர்
அவரை சிறுவயது முதல் அறிவேன்
அவரிடம்  நிறைய சிறப்புகள் இருந்த போதினும்  என்னை  தொட்டவை
புதுவயல் சரஸ்வதி வித்யாசாலை பெண்கள் மேல்நிலை பள்ளி க்கு அவர் ஆற்றிய அரும்பணிகள்
கற்பனையில் நினைத்து பார்த்திராத வளர்ச்சியை கொண்டு வந்தவர் அவரே
தன கைப்பொருளில் பெரும் பகுதியை  பள்ளிகூட கட்டிட வளர்ச்சி அறப் பணி க்கு  தந்த மா கொடை போற்றதக்கது  அதற்கான எண்ணவலுவும் கொடுக்க கூடிய திறன் உடை வாழ்வும் போற்ற தக்கது
மேலும்  திருவாசகம் முற்றோதல்  என்பதை சிறப்பாக வழி நடத்தி காண்பித்தவர்  அவர்
அவரது மனைவியார் அண்ணியார்   மு. அழகம்மை ஆச்சியின் நல்ல மனதும் பெரும்போக்கான போக்கும்
ஆளுமை திறனும் அண்ணனுக்கு   இன்றைய நிலை அடைய பெரும் உதவியாக இருந்தது என்பதை மறக்க முடியாது
===============


Meyyappan Ct  puduvayal

Meyyappan Ct's profile photo, Image may contain: 1 person

 புதுவயல் சரசுவதி சங்கம் சரசுவதி வித்தியாசாலை முத்தப்பன் இவை மூன்றுக்கும் அகராதியில் தேடினால் ஒரே பொருள் தான் கிடைக்கும் . அந்த அளவு முத்தப்பன் அவர்கள் பள்ளியோடு ஒன்றிப்போனவர்கள். எனது ஐந்து வயது முதல் அவரோடு இணைந்து படித்து விளையாடிய நாட்கள் மனத்திரையில் ஓடுகின்றது . தனது உழைப்பின் மூலம் ஈட்டிய பொருளின் பெரும் பகுதியை பள்ளிக்கு ஈன்ற பெருமை அவர்களுக்கு உண்டு. மேடைப்பேச்சு வராத எங்களுக்கு எல்லாம் ஆர்வம் கொடுத்தவர்கள் அவர்கள் . அவரது நாவில் சரசுவதி நற்றுணையாக இருந்ததால் முனைவர் பட்டமும் சைவ சித்தாந்தமும் அவரை நாடிவந்தது என்றால் மிகையாகாது. 

பள்ளித்தோழன் மெய்யப்பன்

----------------------------------------------------------------------

ரெங்க லெ. வள்ளியப்பன். 
Image may contain: 1 person


சித்தாந்த முத்து வாழ்க
தூய செந்தமிழ்ச் சொத்து வாழ்க
கவித்தகச் சொல்லன் வாழ்க
தமிழ் வேதத்து நல்லன் வாழ்க
தத்துவ விளக்கன் வாழ்க
திருவாசக முழக்கன் வாழ்க
முத்தமிழ் நி்லவன் வாழ்க- எங்கள்
முத்தப்பப் புலவன் வாழ்க.

--------------------------------------------------------------------------------------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக