புதன், 26 ஜனவரி, 2022

சோணசைலமாலை -- மீள் பார்வை.


சித்தாந்த செம்மணி முனைவர். பழ.முத்தப்பன்.

மேனாள் முதல்வர்,

கணேசர் செந்தமிழ்க் கல்லூரி, மேலைச்சிவபுரி. 


கற்பனைக் களஞ்சியம் சிவப்பிராகச சுவாமிகள் திருவாய் மலர்ந்து அருளிய முதல்நூல் சோணசைலமாலை ஆகும். இந்நூல் நூறு பாடல்களைக் கொண்டது.சோணசைலம் என்று அழைக்கப்பெறுவது திருவண்ணாமலை மலையே ஆகும். இந்நூல் திருவண்ணாமலையில் சிவப்பிரகாசர் தங்கியிருந்த பொழுது, அண்ணாமலை அண்ணலைப் போற்றித் துதித்ததாகும். பாடலின் முன் இரண்டு வரிகளில் சிவப்பிரகாசர் தன்னுடைய முறைப்பாடுகளையும், பின் இரண்டு அடிகளில் அம்மலை பற்றிய இயற்கை வளத்தையும் இலக்கியச் சுவைபடப் பாடியுள்ளார். அந்நூலை மீள வாசிக்கும் பொழுது எழுந்த சிந்தனைகளைச் சமயமும் சமுதாயமும் என்ற பொருள் பற்றிய கருத்தரங்கில் பதிவு செய்வது இக்கட்டுரையாகும். 


சோணசைலமாலையில் சமயம் :

வீரசைவக் கொள்கைகளில் முதல்படியாக அமைவது ஐவகை ஒழுக்கங்களாகும். அடுத்து இரண்டாவது படியாக அமைவது எண்வகைக் காப்பு என்னும் அட்டாவரணம் ஆகும். இலிங்காசாரம், சதாசாரம், சிவாசாரம், பிருத்தியாசாரம், கணாசாரம் என்பனவாகிய லிங்கஒழுக்கம், தன்னிருத்த ஒழுக்கம், சிவஒழுக்கம், தாழ்வெனும் சைவ ஒழுக்கம், கூட்டமைப்பு ஒழுக்கம் என்ற ஐந்து ஒழுக்கங்களில் நின்று வெற்றி பெறுகின்ற பொழுது, சீவன் ஆத்மன் ஆகின்றான். அதன்பின் எண்வகைக் காப்பினால் ஆத்மன் அங்கன் ஆகும் நிலை பெறுகின்றான் என்பது வீரசைவக் கொள்கையாகும். (வீரசைவம், சென்னைப் பல்கலைக்கழகம், வை. இரத்தினசபாபதி, 1990, ப. 156).  அஷ்டம் ஆவரணம் என்பது எட்டுக் கோட்டைகள் என்று பொருள்படும். கோட்டை என்பது தற்காப்பிற்காக அமைக்கப் படுவது. இதன்படி வீரசைவர் எண்வகைக் காப்பினையும் தற்காப்பிற்காக அமைத்துக் கொள்வர். தன்பால் வரும் தீமைகளிலிருந்து நீங்குவதற்கு எண்வகைக் காப்பினைக் காப்பாகக் கொள்வர். எண்வகைக் காப்பாவன -  

ஷஷகுரு, இலிங்கம், சங்கமம், பாதோதகம், பிரசாதம்,

திருநீறு, அக்கமணி, திருமந்திரம்'


என்பனவாகும். இவ் எட்டில் திருநீறு, அக்கமணி, திருமந்திரம் என்ற மூன்று காப்புகளைச் சிவப்பிரகாரகாசர் , சோணசைலமாலையில் போற்றிப் பாடியுள்ளார். திருநீறு பற்றி வாய்ப்புக் கிடைக்குந்தோறும் சிவப்பிரகாசர் ஆங்காங்கு பெருமையுடன் பாடிப் போற்றுகிறார். 


2

ஷஷநிந்தியாது உடலம் முழுதும் நீரணிய

நேசியாது அமலஐந் தெழுத்துஞ்

சிந்தியாது உழலும் எனைக்கொடுங் கூற்று

என்செய்யுமோ அறந்திலேன் தமியேன்'  (பா.83)

 

என்று குறிப்பிட்டு, உடல் முழுமையும் நீர் அணிந்தால், கொடுஞ்செயல் கொண்ட யமனிடமிருந்து தப்பித்துக் கொள்ளலாம் என்று சிவப்பிரகாசர் குறிப்பிடுவது திருநீற்றின் பெருமையைக் குறிப்பதாகும். 


ஷஷஅள்ளிவெண் டிருநீ றுடன்முழு தணியும்

அடியவர்ப் பெறினெழுந் திளங்கன்று

துள்ளிநின் றுருகும் அன்னையின் மனநெக்கு

உருகுபு சென்றிறைஞ் சிலனே'       (பா.44)


வெண்மையான திருநீற்றைத் தான் உடல் முழுதும் அணிந்திலனே என்று முன்பாடலில் குறிப்பிட்ட சிவப்பிரகாசர், இப்பாடலில் அடியர்கள் உடல் முழுவதும் நீறு பூசிக் காணப் பெறுவார்கள், அவர்களைக் கண்டால் பசுங்கன்றினை நினைந்து உருகும் தாய்ப்பசு போல, மனம் உருகி இரஞ்சினேன் இல்லையே என்று அடியவர்கள் வடிவம் , உடல் முழுதும் திருநீறு பூசிய வடிவமாகும் என்று சிறப்பித்துப் பாடுவது படித்து இன்புறத் தக்கதாகும். இத்தகைய திருநீறு பூசிய அடியவர்களை மேலும் குறிப்பிட்டு,  


ஷஷவெண்டிரு நீறு புனையுமா தவர்க்கு

விருந்து செய் துறும்பெரு மிடியுங்

கொண்டநல் விரதத்து இளைக்கும்யாக் கையும்இக்

கொடியனேற் கருளுநா ளுளதோ' (பா.20)


என்ற பாடற் பகுதியில், அவர்களுக்கு விருந்து படைத்துத் தான் வறுமை அடையவேண்டும் என்ற செய்தியையும் சிவப்பிரகாசர் கூறியிருப்பது சிந்தனைக்கு உரியதாகும். உலகோர் வறுமையை வெறுக்கின்ற நிலையில் சிவப்பிரகாசர் வறுமையை விரும்புவது திருநீற்றின் பெருமையை எடுத்துக் காட்டுவதாக அமைந்துள்ளது. 


அடுத்து, அக்குமணி மாலை பற்றிய சிறப்பினைச் சிவப்பிரகாசர் கீழ்வரும் பாடலில் எடுத்தியம்புகிறார். 


ஷஷகண்டிகைக் கலனே கலனென விழைந்து

காயமேல் அணிந்துவெண் ணீற்றுப்

புண்டரக் குறிசேர் நுதலொடு நினையான்

பூசனை புரியுமாறு அருளாய்' (பா. 85)


3

இப்பாடற் பகுதியில் சிவபூசை செய்யும் பொழுது திருநீறை அணிந்திருப்பதோடு, அக்குமணி மாலையாம் உருத்திராக்கக் கண்டிகையையும் அணிந்து கொள்ள வேண்டும் என்ற வீரசைவ வழிபாட்டு முறைமையினை வலியுறுத்தி அதன் பெருமையை வெளிப்படுத்துகிறார். 


திருநீறு, அக்குமணி என்ற இரண்டையும் குறிப்பிட்டதோடு, திருமந்திரமாம் ஐந்தெழுத்து மந்திரத்தின் பெருமையையும் சோணசைல மாலையில் சிவப்பிரகாசர் பலவாறு போற்றிப் புகழுகின்றார். 


ஷஷநாவில் ஐந்தெழுத்து மந்திரம் அலாத

நவிற்றுவோர் தமையுநீ யிருப்பப்

பாவினங் கொடுபுன் மனிதரைப் புகழும்

பாமரர் தமையுமென் றொழிவேன்.'    (பா.86)


என்று குறிப்பிட்டு, ஐந்தெழுத்து மந்திரத்தை நாவில் நவிற்றுவோர் இறைவனுக்குச் சமமாவார்கள் என்ற கருத்தினை உட்படுத்திச் சிவப்பிரகாசர் ஐந்தெழுத்தின் பெருமையைப் போற்றுகின்றார். மேலும்,


ஷஷதொடுக்கும் ஆகமங்க ளெலாஞ்சொல் ஜந்தெழுத்துந்

திணிந்தநெஞ் சிருக்கையாற் பகையைப்

படைக்கைதா னிருந்தும் அஞ்சுறும் அவர்போற்

பகட்டுமா மறலியை வெருவேன்'  (பா. 82)


என்ற பாடற்பகுதியில் , இறைவன் அருளிச் செய்த ஆகமங்கள் அனைத்தும் ஐந்தெழுத்தைப் போற்றிடும், அதனை வினை திர்க்கும் ஆயுதமாகக் கொண்டால்  யமனுக்கு அஞ்ச வேண்டியதில்லை என்று சிவப்பிரகாசர் குறிப்பிடுவது ஐந்தெழுத்தின் பெருமையை உணரச் செய்கிறது. இவ்வாறு வீரசைவ சமயத்தில் இடம் பெற்றுள்ள அட்டாவரணத்தில் மூன்று காப்புகளையும் சிவப்பிரகாசர் பெருமையாகப் போற்றிப் புகழ்வதால் , சோணசைலமாலையின் மூலம் சமய உணர்வினைப் பெற இயலுகிறது.   


இவ்வாறு ஐந்தெழுத்து மந்திரத்தோடு தத்துவமசி என்ற ஞான உபதேச மந்திரத்தின் சிறப்பையும் சிவப்பிரகாசர் கீழ்வரும் பாடலில் குறிப்பிடுகிறார். 


ஷஷபொறியெனப் புலன்கள் எனக்,கர ணங்கள்

பூதங்க ளெனஇலாது அடங்க

அறிவெனத் தமியேற்கு ஒருமொழி உதவி

அருவினைக் குறும்பற எறியாய்' (பா.88)



4

என்ற பாடற்பகுதியில் ஒருசொல் என்பது தத்துவமசி என்ற வாக்கினைக் குறிப்பதாகும். நீ அவனாகிறாய் என்ற ஞானமொழியினை ஆசாரிய உபதேசமாகத் தமக்குத் தந்து, சிவபெருமான் தனது வினைகளை அறுக்க வேண்டும் என்று சிவப்பிரகாசர் குறிப்பிடுவதால், தத்துவமசி என்ற ஞான வாக்கின் பெருமையை அறிய முடிகிறது. 


இத்தகைய ஞானத்தைத் தருகின்ற இறைவன் அருளால் ஆன்மா பெறுகின்ற துன்பமும் அருளேயாகும் என்பது சிவப்பிரகாசரின் தெளிந்த எண்ணமாகும். 

ஷஷயாவுமாம் உமைஉண் ணாமுலைப் முலைப்பால்

ஈந்துபா டச்செயாய் எனினும்

மேவுமாம் துயர்செய் சூலைநோய் எனினும்

விடுத்துநிற் பாடுமாறு அருளாய்' (பா.32)


என்ற பாடற்பகுதி மூலம், திருஞானசம்பந்தருக்குக் கொடுத்த ஞானப்பாலைத் தமக்குக் கொடுக்கவில்லை என்றாலும், திருநாவுக்கரசருக்கு அளித்த சூலை நோயையாவது தனக்கு அருளவேண்டும் என்று சிவப்பிரகாசர் குறிப்பிட்டுத், துன்பமும் இறைவனின் திருவருளேயாகும் என்று கூறியிருப்பது வாழ்வில் மேற்கொள்ள வேண்டிய சமய நெறியாகும். 


சோணசைலமாலையில் சமுதாயம் :

சமயக் கருத்துக்களைச் சோணசைலமாலையில் பதிவு செய்திடும் சிவப்பிரகாசர், சமுதாயத்திற்கு உரிய ஒழுக்க முறைமைகளையும் கூறிச் செல்வது, சோணசைலமாலை மீள்பார்வை மூலம் உணர முடிகின்றது. 


சமுதாய மக்கள் தங்களுக்கு வந்திடும் நோய்தனைத் தீர்க்க இன்றைக்குப் பயன்படுத்தும் மருந்துகளைக் காட்டிலும், பச்சிலை மருந்துகளைப் பயன்படுத்துவது சாலச் சிறந்ததாகும் என்பதைச் சிவப்பிரகாசர் கூறும் முகத்தான் அறியமுடிகிறது.  


ஷஷசினவுநோய் மருந்து வேறுகொண் டிருக்குஞ்

சிலம்புகள் நாணஉட் கொள்வோர்

சனனநோய் மருந்தாய் எழுந்திடுஞ் சோண

சைலனே, கைலைநா யகனே.' (பா.65)


சோணசைலமலை தன்னை வணங்குவோரின் பிறவிநோய்ப் பிணியைத் தீர்ப்பதைக் கண்டு பிறமலைகள் நாணமுற்றனவாம். அந்த மலைகள் எப்படிப்பட்டவை என்றால், உடலை வருத்துகின்ற உடல்நோய் தீர்ப்பதற்கு வௌ;வேறான மருந்துகளாம் இலைகளைப் பெற்றிருக்கின்ற மலைகள் என்று குறிப்பிட்டு, 


5

உடல் நோய்களைத் தீர்ப்பதற்கு மருத்துவத் தன்மை பொருந்திய இலைகளைப் பயன்படுத்த வேண்டும் என்று சிவப்பிரகாசர் குறிப்பிடுகிறார். 


பிற அருளாளர்கள் மனித்தப் பிறவியை வேண்டாம் என்று துரந்திட, சிவப்பிரகாசரோ மனித்தப் பிறவி வேண்டும் என்று திருநாவுக்கரசர் வழியில் இறைவனிடம் வேண்டுகிறார். 


ஷஷவிரைவிடை யிவரு நினைப்பிற வாமை

வேண்டுநர் வேண்டுக மதுரம்

பெருகுறு தமிழ்ச்சொல் மலர்நினக் கணியும்

பிறவியே வேண்டுவன் தமியே' (பா.39)


என்ற பாடற்பகுதியில் பிற அருளாளர்கள் இறைவனிடம் பிறவி வேண்டாம் என்று கூறட்டும், ஆனால்  இறைவன் மீது நற்றமிழ் பாமலை பாடுவதற்காக தனக்கு மனித்தப்பிறவி வேண்டும் என்று கேட்பது சமுதாய நோக்கமாகும். 


மேலும், சமுதாயத்தில் மனிதர்க்கு வேண்டும் பண்பாடுகளைக் கீழ்வரும் பகுதியில் சிவப்பிரகாசர் குறிப்பிடுகிறார். 


ஷஷஈரமும் அருளும் ஒழுக்கமும் சால்பும்

இன்சொலும் இந்திரியப் பகைவெல்

வீரமும் அருளி எனதுவெம் பிறவி

விலக்கி ஆட்கொள்ளுநா ளுளதோ'   (பா.48)


என்ற பாடற் பகுதியில் அன்பு, அருள், ஒழுக்கம், சால்பு, இன்சொல், ஐம்புலன்களை வெல்லும் வீரம் ஆகியவை தனியொரு மனிதனுக்குத் தேவை என்பதை உணர்ந்து, அவற்றைத் தனக்கு இறைவன் அருளவேண்டும் என்று சிவப்பிரகாசர் வேண்டுவது, தனக்காக மட்டும் அல்லாது சமுதாய மக்களுக்கும் ஆகும்.


சமுதாய மக்கள் உடல் உறுப்புக்களைப் பெற்றிருப்பது இறை வழிபாட்டிற்கே ஆகும் என்பதையும் சிவப்பிரகாசர் கீழ்வரும் பாடலில் குறிப்பிடுகின்றார். 


ஷஷகண்கள்நிற் பரிந்து கண்டுஉவப் பனவே

கைகள்நிற் தொழுபவே செவிகள்

பண்களிற் புகழும் புகழ்ச்சிகேட் பனவே

பத(ம்)நினை வலம்புரி வனவே' (பா.75)


என்ற பாடற் பகுதியில் மக்களின் கண்கள் மகிழ்ந்து இறைவனைக் கண்டு வணங்கவும், கைகள் இறைவனைத் தொழவும், காதுகள் இறைவன் புகழைக் கேட்பனவும், கால்கள் இறைவனை வலம் வருவனவும் ஆக இருத்தல் வேண்டும் என்று சிவப்பிரகாசர் குறிப்பிடுவது, மனித சமுதாயம் இறைபணியை மேற்கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தவே ஆகும். இவ்வாறு பல சமுதாய நெறிமுறைகளைச்; சிவப்பிரகாசர் சோணசைலமாலையில் பதிவு செய்துள்ளார். 


முடிபு :


சிவப்பிரகாசரின் சோணசைலமாலை நூலை மீண்டும் வாசிக்கும் பொழுது, அவரால் பதிவு செய்யப் பெற்றுள்ள வீரசைவக் கொள்கைகளையும், சமுதாய நெறிமுறைகளையும் அறிந்து , இலக்கிய இன்பத்தோடு, சமய உணர்வையும் சமுதாய உணர்வையும் பெறமுடிகின்றது. 


திருச்சிற்றம்பலம். 




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக