புதன், 26 ஜனவரி, 2022

பனிரெண்டாம் திருமுறையில் வேதம்


சித்தாந்தச்செம்மணி,முனைவர். பழ. முத்தப்பன்,

முன்னை முதல்வர்,கணேசர் செந்தமிழ்க் கல்லூரி.

மேலைச்சிவபுரி.

வேதம் - வித்து என்னும் சொல்லடியில் இருந்து தோன்றியது. வித்து என்ற அடிச்சொல்லிற்கு அறிதல் என்பது பொருளாகும். எனவே வேதம் என்ற சொல் அறிவுநூலைக் குறிக்கும்.  என்றாலும் நடைமுறையி;ல் பல்வகை அறிவுகளுக்கு இடையே தத்துவங்களை ஆராய்ந்து கூறுகின்ற நூல்களே வேதங்கள் எனப்பட்டன.  இரண்டாயிரம் ஆண்டுகட்கு முற்பட்ட இந்தியத் தத்துவ ஞானம் அவ்வேதங்களை அடிப்படையாகக் கொண்டு விவாதிக்கப் பெற்றது. இந்தியத் தத்துவ ஞானத்திலும் இந்தியச் சமயங்களிலும் இன்றகை;குக் காணப்படுகின்ற கருத்து வேறுபாடுகள் அதிக அளவில் இருந்தாலும் , அவை அனைத்திற்கும் மூலமாக விளங்குவது வேத வாக்கியங்களே ஆகும். 

இந்தியச் சமயங்கள் வேதத்தைக் குறிப்பிடாமல் தன் வாதங்களை வைக்க இயலாது. கி.பி. பதிமூன்றாம் நூற்றாண்டில் தோன்றிய சைவ சித்தாந்தத் தலைமை நூலான சிவஞானபோதத்தின் சிறப்பைக் குறிப்பிடும்

ஷஷவேதம் பசு, அதன்பால் மெய் ஆகமம், நால்வர்

ஓதும் தமிழ் அதனின் உள்ளுறு நெய் - ஓதமிகு

நெய்யின் உறுசுவையாம் நீள்வெண்ணெய் மெய்கண்டான்

செய்ததமிழ் நூலின் திறம்'

என்ற பாடல் சைவசித்தாந்தம் வேதத்தோடு தொடர்புடையது என்பதைச் சுட்டுவதற்குரிய சான்றாகும். 


சித்தாந்த நூல்களுக்கு அடிப்படையான பன்னிரு சைவத் திருமுறைகளில் வேதம் என்ற சொல்லும், சொல்லுக்குரிய பொருளாக இறைவனும் , இறைவனால் அருளப் பெற்றவை வேதங்கள் என்பதும், விரவிக் கிடக்கின்றன. பனிரெண்டாம் திருமுறையில் வேதம் , சொல் வடிவிலும் , கருத்து வடிவிலும் இடம் பெற்றுள்ளமையைச் சுட்டிக் காட்டுவதே இக்கட்டுரையின் நோக்கமாகும். 


வேதங்கள் யாரால் எப்பொழுது தோற்றுவிக்கப் பெற்றன என்பதை அறுதியிட்டுக் கூறமுடியாது என்றாலும், பனிரெண்டாம் திருமுறை சிவபெருமானால் தோற்றுவிக்கப் பெற்றதுதான் வேதங்கள் என்ற கருத்தைப் பதிவு செய்துள்ளது. 

வேதங்கள் மொழிந்தபிரான் மெய்த்தொண்டர் நிலைகண்டு

ஷஷநாதன் தன் அடியாரைப் பசிதீர்ப்பேன்' 

(காரைக்காலம்மையார்,பா.18)

என்றும், 

ஷஷவந்து பந்தர்மா தவி;மணங் கமழ்கரு காவூர்ச்

சந்த மாமறை தந்தவர் கழலிணை தாழ்ந்தே'

(திருஞானசம்பந்தர், பா. 372)

என்றும் இடம்பெற்ற பதிவுகள் வேதங்களைச் சிவபெருமான்தான் அருளினார் என்பதை நிறுவுகின்றன. 


சிவபெருமான் வேதங்களை அருளினார் என்பதோடல்லாமல் வேதங்களின் உட்பொருளாகவும் சிவபெருமானே விளங்குகிறார் என்பதையும் பனிரெண்டாம் திருமுறை பதிவு செய்துள்ளது. 


ஷஷபூதம் யாவையின் உள்ளலர் போதென

வேத மூலம் வெளிப்படு மேதினி'

(திருமலைச் சிறப்பு , பா. 33)

என்றும்,

ஷஷபெருமறை ஓசை மல்கப் பெருந்திருக் கோயில் எய்தி

அருமறைப் பொருளா னாரைப் பணிந்து'

(திருஞானசம்பந்தர், பா. 119)

என்றும் இடம்பெற்ற பகுதிகள் அக்கருத்தை நிறுவுகின்றன. 


வேதங்கள் இறைவனின் பெருமையைக் கூறுவதோடு , எழுதாமறை என அவை குறிக்கப் பெற்றுச் செவிவழிச் செய்தியாக உணரப்படுவன என்பதையும் பனிரெண்டாம் திருமுறை குறிப்பிடுகிறது. 


ஷஷஎழுதாத மறை அளித்த எழுத்தறியும் பெருமானைத்

தொழுதார்வ முறநிலத்தில் தேய்ந்தெழுந்தே'

(திருநாவுக்கரசர், பா. 335)

என்ற பகுதி எழுதாத மறை என்று வேதத்தைக் குறிப்பிட்டு , அதனை அளித்த திருவொற்றியூர் இறைவன்  எழுத்தறியும் பெருமான் என்ற திருநாமத்தோடு விளங்கினான் என்பதைக் குறிப்பிட்டு, வேதம் எழுத்து மொழியால் அல்லாது எடுத்து மொழியால் உணரத்தக்கது என்பதைக் குறிப்பிடுகிறது. இந்த எழுதாத மறையாம் வேதத்தை இறைவன் திருவருளால் ஓதாது உணரமுடியும் என்பதையும் பனிரெண்டாம் திருமுறை உணர்த்துகிறது. 


ஷஷஅணைந்த மாமறை முதற்கலை அகிலமும் ஓதா

துணர்ந்த முத்தமிழ் விரகன்வந் தான்'

(திருஞானசம்பந்தர், பா. 223)

என்ற பகுதி திருஞானசம்பந்தர் மதலைப் பருவத்தே வேதங்களை இறைவன் திருவருளால் உணர்ந்தார் என்பதைக் குறிப்பிடுகிறது. இதனால் இறைவனால் தரப்பெற்ற வேதம் , இறைவனாலேயே வளர்க்கப் பெற்றப் பாதுகாக்கப் பெறுகிறது என்பதும் புலனாகின்றது.  

பனிரெண்டாம் திருமுறை மற்ற வரலாறுகளை விடத் திருஞானசம்பந்தர் வரலாற்றில்தான் வேதத்தைக் குறிப்பிட்டு , அவர் வரலாற்றை நடத்திச் செல்கிறது. வேதநெறி தழைத்தோங்க மிகு சைவத்துறை விளங்க, திருஞான சம்பந்தரின் தோற்றம் நிகழ்ந்தமையை அதற்குரிய காரணமாகவும் கொள்ளலாம். 


வேதத்தின் உட்பொருளாக இறைவன் விளங்குகின்ற அதே நேரத்தில், இறைவனுக்குரிய சடங்குகளை வேதம் முதன்மையாகக் குறிப்பிடுகின்றது என்பதையும் இத்திருமுறை எடுத்துக் காட்டுகிறது. 


ஷஷமாமறை விதிவ ழாமல் மணத்துறைக் கடன்கள் ஆற்றித்

தூமறை மூதூர்க் கங்குல் மங்கலந் துவன்றி ஆர்ப்ப'

(தடுத்தாட் , பா. 13)

என்றும்,

ஷஷதூயதிரு மாமறை தொடர்ந்தநடை நூலின்

மேயவிதி ஐயிரு தினத்தினும் விளைத்தார்'

(திருஞானசம்பந்தர், பா.40)

என்றும் இடம்பெற்ற பகுதிகள் , மனித வாழ்வியல் சடங்குகள் வேதநெறிப்படி ;நடந்தன என்பதை அறிவிக்கின்றன. அந்த அளவிற்குக் கி.பி. பனிரெண்டாம் நூற்றாண்டுக் காலத்திலும், அதற்கு முன்னரும் வேதநூல்கள் மக்களிடத்திலே வழக்கத்தில் இருந்திருக்கின்றன எனத் தெரிகிறது. 


வேத நூல்களில் சிறந்து விளங்கிய சான்றோர்களை வேதப் பாரகர் என்று பனிரெண்டாம் திருமுறை குறிப்பிடுகிறது. 


ஷஷவேதபா ரகரின் மிக்கார் விளங்குபேர் அவைமுன் சென்று

நாதனாம் ஷஷமறையோன் சொல்லும்' நாவலூர் ஆரூரன்'

(தடுத்தாட் , பா. 51)

என்றும், 

ஷஷவேத பாரகர் பணிந்துமெய் யுணர்வுடன் உருகிய விருப்போடும்

கோதி லாஇசை குலவு ஷஷகுண்டைக்குறட் பூதம்' என்றெடுத்தேத்தி'

(திருஞானசம்பந்தர், பா. 965)

என்றும் அமைந்த பகுதிகள் பனிரெண்டாம் திருமுறைக் காலத்தில் வேத விற்பன்னர்கள் சமுதாயத்தில் பாராட்டுப் பெற்றிருந்தனர் என்பதைக் குறிப்பிடுகின்றன. 


வேதங்களை இறைவன் உலகிற்காகத் தந்தான் என்றும், அதனைக் கடைப்பிடித்து வீட்டுநெறியை (முத்திநெறியை) அடையலாம் என்றும்  பனிரெண்டாம் திருமுறை வலியுறுத்துகிறது.  

ஷஷஉலகியல் வேதநூல் ஒழுக்கம் என்பதும்

நிலவுமெய்ந் நெறிசிவ நெறிய தென்பதும்'

(திருஞானசம்பந்தர், பா. 820)

என்ற பகுதி அக்கருத்தை வலியுறுத்துகிறது. இதனால் உலகிற்கு உரிய ஒழுக்க நடை வேதநூலில் விதித்த ஒழுக்கமே என்பதும், வீடுபேறடைய உண்மை நெறியாக விளங்குவது சிவநெறியே ஆகும் என்பதும் இப்பகுதியின் பொருளாகும். எனவே வேதநெறியோடு தொடர்புடையது சிவநெறி என்பதை அறுதியிட்டுச் சொல்லுகின்றது பனிரெண்டாம் திருமுறை. ஆதலால் வேதநெறியும் சிவநெறியும் ஒன்றோடொன்று பிணைந்தது என்பதை உணர்தல் வேண்டும்.  

வேதத்தின்வழி திருமுறைகள் அமைந்தன என்பதைக் குறிப்பால் உணர்த்த , வேதத்தை எழுதாமறை என்று குறிப்பிட்ட பனிரெண்டாம் திருமுறை , திருஞானசம்பந்தரின் திருமுறைப் பாடல்களை எழுதும் மறை என்று குறிப்பிடுவது மிக இன்றியமையாததாகும். 

ஷஷபழுதில் சீர்த்திருப் பரிதிநன் னியமமும் பணிந்தங்(கு)

எழுது மாமறை யாம்பதி கத்திசை போற்றி'

(திருஞானசம்பந்தர்,பா. 375) என்பது அதனை உணர்த்தும் பகுதியாகும். எழுதுமறை தந்த திருஞானசம்பந்தர்  பாடிய தேவாரம், எழுதாமறையான ஆதிமறையின் பொருளைத் தரும் தமிழ்மறையாகும்  என்பதும் பனிரெண்டாம் திருமுறையின் குறிப்பாகும்.

ஷஷகோதிலா ஆரமுதைக் கோமளக்கொம் புடன்கூடக் கும்பிட்டேத்தி

ஆதியாம் மறைப்பொருளால் அருந்தமிழின் திருப்பதிகம் அருளி'

(திருஞானசம்பந்தர், பா. 464) என்பது அக்கருத்தைக் குறிப்பிடும் பகுதியாகும்.  இவ்வாறு வேதம் சிவபெருமானால் அருளப்பெற்றது என்பதையும், அதனை அவனருளால் உணரலாம் என்பதையும் , அவ்வாறு உணர்ந்த ஞானசம்பந்தர் வேதபாரகர் என்பதையும், அவர் பாடிய எழுதாமறை ஆதியாம் மறையின் தமிழ் வடிவமே என்று குறிப்பிட்ட பனிரெண்டாம் திருமுறை , வேதவழி வந்த தேவாரம் வேதத்தின் தடைகளை நீக்கியது என்பதை திருமறைக்காட்டில் திருக்கதவம் திறந்து மூடிய செய்திகளால் வெளிப்படுத்தி , தன் முடிவையும் கீழ்க்கண்ட பகுதியால் நிறுவுகிறது. 


ஷஷவேதங்கள் எண்ணில் கோடி மிடைந்து செய் பணியை மிக்க

ஏதங்கள் நம்பால் நீப்பார் இருவருஞ் செய்து வைத்தார்'

(திருஞானசம்பந்தர், பா. 591)

என்பது பனிரெண்டாம் திருமுறை காட்டும் முடிவாகும். எண்ணற்ற வேதங்கள் திருக்கதவை மூடிய செயலை , உயிர்களின் குற்றங்களைத் தீர்க்கின்ற இருவரும் தீர்த்துவைத்தனர் என்று குறிப்பிட்டுத் தமிழ் வேதத்தின் உயர்வைப் பனிரெண்டாம் திருமுறை குறிப்பிடுகிறது. 

பனிரெண்டாம் திருமுறை வேதம் பற்றிய செய்திகளைப் பலவாறாகக் குறிப்பிட்டாலும் அதில் ஒருசில பகுதிகளை இக்கட்டுரை எடுத்துக் காட்டுவதன் மூலம் வேதமும் திருமுறைகளும் ஒன்றோடொன்று பிணைந்தவையே அன்றி வேறுபடக் காணமுடியாது என்பது பெறப்படும்.  

 



 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக